சட்டரீதியில் விலகாமல் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்காக 2022 நவம்பர் 15 முதல் 2022 டிசம்பர் 31வரை பொது மன்னிப்பு காலமொன்றை அறிவிக்கப்பட்டது.
மேலே உள்ள பொதுமன்னிப்பின் கீழ், சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்று தற்போது வெளிநாட்டில் இருக்கும் கடற்படை பணியாளர்களுக்கு மீண்டும் அறிக்கை செய்யாமல் உத்தியோகபூர்வமாக சேவையிலிருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதன்படி, 2022.10.25 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்னர் உரிய முறையில் விடுமுறை பெறாத கடற்படை வீரர்கள் தங்களது சேவையில் இருந்து உரிய முறையில் விடுவிப்பு பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாரு சட்ட ரீதியில் விலகிச் செல்பவர்களுக்கு எதிராக வேறு எந்தவொரு ஒழுக்காற்று விசாரணைகள் நிலுவையில் இருக்கக் கூடாது. மேலும், இவர்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை அல்லது வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை மோசடியாகத் தயாரிக்கவில்லை என்பது குடிவரவுத் திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இந்த பொது மன்னிப்புக் காலத்தில் சட்டரீதியில் விலக விண்ணப்பிக்கும் அதிகாரிகள் பின்வரும் தகவல்களை nhqaseci@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும், கடற்படையினர் nhqdgp@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.
அ. பெயர், பதவி/தரம், அதிகாரப்பூர்வ எண்
ஆ. சேவையிலிருந்து வெளியேறிய திகதி
இ. பாஸ்போர்ட்டின் பயோமெட்ரிக் பக்கத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகள் (Scanned copy of biometric page of the passport)
ஈ. பாஸ்போர்ட்டின் மாற்றங்கள் பக்கம் மற்றும் கண்காணிப்புப் பக்கத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகள் (Scanned copies of alteration and observations page)
உ. குடியேற்ற முத்திரைகளின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகள் (Scanned copies of emigration stamps)
ஊ. கடந்த மற்றும் தற்போதைய விசாக்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகள் (Scanned copies of past and present VISAs)
எ. உள்ளூர் தொடர்பு முகவரின் விவரங்கள் (Contact details of locally based representative)
மேற்கண்ட தகவல்கள் அந்தந்த நிருவனங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின் பணிநீக்கம் செய்வது பரிசீலிக்கப்படும்.