போர்வீரர்கள் ஞாபகார்த்த தினம் - 2022 பெருமையுடன் கொண்டாடப்பட்டது

தாய்நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து போர் வீரர்களும் நினைவுகூறும் போர்வீரர்கள் ஞாபகார்த்த தினம் -2022 நிகழ்வுகளின் பிரதான நிகழ்வு கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் இன்று ( 2022 நவம்பர் 13) நடைபெற்றதுடன் இந் விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இந் நிகவுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது உயிர் தியாகம் செய்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளதுடன் தற்போது தாய்நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து போர் வீரர்களும் நினைவுகூறி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் போர் வீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.

அதன் படி, இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவு கூரும் நிகழ்ச்சியின் போது தாய்நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து போர் வீரர்களும் நினைவுகூறி இரண்டு நிமிடம் மவுனம் செலுத்தப்பட்டது. அதன்பிறகு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வுபெற்ற) முதலில் போர்வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அதன் பின் பாதுகாப்புப் படைத் தளபதி, கடற்படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினார்கள். மேலும்,முப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் போர் வீரர்களின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போதும், சுதந்திரத்திற்குப் பின்னரும் தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து படைவீரர்களையும் நினைவுகூரும் பிரதான நிகழ்வுடன் இணைந்து கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற போர்வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் இடம்பெற்றதுடன் இதற்காக கடற்படைத் தலைமையகம் மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல் பராக்கிரம நிறுவனத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட மற்றும் இளைய மாலுமிகள் அடங்கிய குழுவொன்று கலந்துகொண்டது. அதே சமயம், அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி நடைபெற்ற நிகழ்வுகளுக்காக கடற்படையின் அனைத்து கப்பல்கள் மற்றும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கடற்படையினர் கழந்துகொண்டனர்.


Naval Headquarters


Eastern Naval Command


Western Naval Command


Northern Naval Command


Northwestern Naval Command


North Central Naval Command


Southern Naval Command


Southeastern Naval Command