கடற்படை சேவா வனிதா பிரிவின் சேவைகள் விரிவுபடுத்தப்படும்
கடற்படை சேவா வனிதா பிரிவின் கெளரவத் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின்படி, கடற்படையினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக, வெலிசறையில் நிறுவப்பட்ட சேவா வனிதா அழகு நிலையம், மலர் அலங்கார அலகு மற்றும் பதிக் உற்பத்தி நிலையம் ஆகியவற்றின் சேவைகள் பொது மக்களும் சலுகை விலையில் பெற்றுக்கொடுக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, வெலிசர மஹபாகே பகுதியில் உள்ள சேவா வனிதா அழகு நிலையம் பெண்களுக்கான அனைத்து வகையான அழகு சிகிச்சைகளையும், நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களின் கீழ் மலிவு விலையில் வழங்குகிறது. மேலும், தரமான சேவையை வழங்குவதற்காக, நவீன உபகரணங்களுடன் சலூனின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், திருமணங்கள் மற்றும் எந்த பண்டிகை நிகழ்வுகள் உட்பட வாழ்க்கையின் முக்கிய சந்தர்ப்பங்களில் மலர் அலங்கார சேவைகளை வழங்குவதற்காக மலர் அலங்கார அலகு திறக்கப்பட்டுள்ளது.
மேலும், சேவா வனிதா பதிக் உற்பத்தி மையம் மூலம் உயர்தர பத்திக் சாரிகள், சட்டைகள், புடவைகள் மற்றும் இதர துணிகள் மற்றும் நேர்த்தியான அலங்காரங்களை சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் வாங்க ஏற்பாடு செய்துள்ளது.