Indo-Pacific Endeavour 2022 இல் பங்கேற்ற ராயல் அவுஸ்திரேலிய கடற்படை போர்க்கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் நடத்திய கடற்படை பயிற்சிக்குப் பிறகு தீவை விட்டு புறப்பட்டது
Indo-Pacific Endeavour 2022 இல் பங்கேற்பதற்காக 2022 அக்டோபர் 25, ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ராயல் ஆஸ்திரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்களான எச்.எம்.ஏ.எஸ் எடிலேட் (HMAS Adelaide) மற்றும் எச்.எம்.ஏ.எஸ் என்ஸாக் (HMAS ANZAC) ஆகிய கப்பல்கள் இலங்கை கடற்படை கப்பல் சயுரல மற்றும் சிந்துரலவுடன் நடத்திய கூட்டு கடற்படை பயிற்சிக்குப் பிறகு 2022 அக்டோபர் 26 ஆம் திகதி தீவை விட்டு புறப்பட்டது.
அதன்படி, இந்த இரண்டு போர்க்கப்பல்களும் தீவில் இருந்து புறப்படும்போது, இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் பாரம்பரிய கடற்படை பிரியாவிடை நடத்தினர். அதன் பின், கொழும்பு துறைமுகத்தில் இருந்து மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில், இலங்கை கடற்படை கப்பல்களான சயுரல மற்றும் சிந்துரல ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல்களுடன் இணைந்து கப்பல்களுக்கு இடையே செய்தி மற்றும் பொருட்கள் பரிமாற்றம், கப்பல்களில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவது தொடர்பான பயிற்சிகள் மற்றும் கப்பல்களுக்கு இடையே மரியாதை நிமித்தமான அழைப்புகள் ஆகிய கூட்டு கடற்படை பயிற்சிகள் நடத்தப்பட்டன.
வெளிநாட்டு கடற்படைகளுடனான இத்தகைய கடற்படை பயிற்சிகள் மூலம் பெறப்படும் அறிவும் அனுபவமும் எதிர்காலத்தில் கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களை கூட்டாக சமாளிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.