Indo-Pacific Endeavour 2022 இல் பங்கேற்கும் 02 ராயல் அவுஸ்திரேலிய கடற்படை போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன
Indo-Pacific Endeavour 2022 பயிற்சியில் பங்கேற்கும் ராயல் அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான எச்.எம்.ஏ.எஸ் எடிலேட் (HMAS Adelaide) மற்றும் எச்.எம்.ஏ.எஸ் என்ஸாக் (HMAS ANZAC) ஆகிய இரண்டு போர்க்கப்பல்கள் இன்று (2022 அக்டோபர் 25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன, வருகை தந்த கப்பல்களை இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.
Indo-Pacific Endeavour திட்டம் ஆஸ்திரேலியா மற்றும் பிராந்திய மாநிலங்களுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக 2017 முதல் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, Indo-Pacific Endeavour 2022 கீழ் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்துடன் ராயல் ஆஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல்கள் தென்கிழக்கு ஆசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் நாடுகளான கிழக்கு திமோர், வியட்நாம், பிலிப்பைன்ஸ், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து, புருனே, மலேசியா மற்றும் சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் இந்தியா ஆகிய 14 நாடுகளுக்குச் செல்கின்றது.
அதன்படி, Indo-Pacific Endeavour 2022 பயிற்சியில் பங்கேற்கும் ராயல் அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான எச்.எம்.ஏ.எஸ் எடிலேட் (HMAS Adelaide) மற்றும் எச்.எம்.ஏ.எஸ் என்ஸாக் (HMAS ANZAC) ஆகிய இரண்டு போர்க்கப்பல்களும் இன்று (2022 அக்டோபர் 25,) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் கொமடோர் மெல் வைஸ் (Cmde Mal Wise), கூட்டுப் பணி படையின் கட்டளை அதிகாரியாக உள்ளார்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Landing Helicopter Dock (LHD) வகைக்கு சொந்தமான எச்.எம்.ஏ.எஸ் எடிலேட் போர் கப்பலின் கட்டளை அதிகார்ரியாக எஸ்.ஜே வோட்டர்ஸ் (Capt SJ Watters) பணியாற்றுகின்றதுடன் குறித்த கப்பல் 230 மீட்டர் நீளம் மற்றும் 543 நபர்கள் கொண்டுள்ளது. மேலும் 08 தாக்குதல் ஹெலிகாப்டர்களும் கொண்டுள்ளது. எச்.எம்.ஏ.எஸ் என்ஸாக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் DM MCPHERSON பணியாற்றுகின்றதுடன் இக் கப்பல் 118 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் மொத்தம் 191 பணியாளர்கள் மற்றும் ஒரு தாக்குதல் ஹெலிகாப்டரைக் கொண்டுள்ளது.
மேலும், Indo-Pacific Endeavour 2022 கூட்டுப் பணிக்குழுவின் கட்டளை அதிகாரி கொமடோர் மெல் வைஸ் (Cmde Mal Wise) இன்று (25 அக்டோபர் 2022) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்னவைச் சந்தித்தார். கொமடோர் மெல் வைஸ் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ சந்திப்பு இடம்பெற்றதுடன், சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்புக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
Indo-Pacific Endeavour 2022, கீழ் கடல்சார் பாதுகாப்பு மற்றும் நீர்சார் நடவடிக்கைகள் குறித்த மாநாடு மற்றும் அறிவுப் பரிமாற்ற நிகழ்ச்சியொன்று ராயல் ஆஸ்திரேலிய கடற்படையால் இந்தக் கப்பல்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மேலும் இலங்கை கடற்படை வீரர்கள் மற்றும் இலங்கை விமானப்படை வீரர்களுக்காக இந்தக் கப்பல்களின் வசதிகள் கண்காணிப்பு விஜயமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு கப்பல்களும் தீவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இரு நாட்டு கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் இந்தக் கப்பல்களின் முழுக் கடற்படையினரும் பங்கேற்க உள்ளனர்.
மேலும், இந்த இரு கப்பல்கள் 2022 ஒக்டோபர் 26 ஆம் திகதி தீவை விட்டு வெளியேறும் போது மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படையுடன் கடற்படை பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதுடன் மேம்பட்ட நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் மூலம் எதிர்காலத்தில் பொதுவான கடல்சார் சவால்களை கூட்டாக சமாளிக்க இத்தகைய கடற்படை பயிற்சிகள் பெரும் உதவியாக இருக்கும்.