‘Trinco Dialogue - 2022’ கடல்சார் மாநாடு வெற்றிகரமாக திருகோணமலையில் நடைபெற்றது
‘Trinco Dialogue - 2022’ கடல்சார் மாநாடு திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரன்ணாகொட கேட்போர் கூடத்தில் 2022 ஒக்டோபர் 21 ஆம் திகதி கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
'இலங்கை கடற்படை: எதிர்காலத்திற்கான பாதை வரைபடம்' என்ற தொனிப்பொருளில் கடற்படையின் இளம் அதிகாரிகளின் தொழில்சார் அறிவை விரிவுபடுத்தும் நோக்கில் 08வது முறையாக நடத்தப்பட்ட ‘Trinco Dialogue – 2022’கடல்சார் மாநாடு கொமடோர் டேமியன் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலின் கீழ் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்வியகத்தின் 31 வது கனிஷ்ட உத்தியோகத்தர் பணியாளர் பாடநெறியைச் சேர்ந்த மாணவர் உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மாநாட்டின் புலமைப் பேச்சை ஆரம்பித்து வைத்து, இரத்மலானை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி சிந்துஜா ஜயரத்னவினால் ஆய்வுக் கட்டுரை ஒன்று முன்வைக்கப்பட்டது. மேலும், கமாண்டர் பிரியதர்ஷன உடகும்புர மற்றும் கமாண்டர் சமிந்த வரகுலுகே ஆகியோர் அங்கு ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்ததுடன், 31 வது கனிஷ்ட உத்தியோகத்தர் பணியாளர் பாடநெறியைச் 06 மாணவர் உத்தியோகத்தர்கள் 03 ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
மேலும், இந்த நிகழ்விற்காக கடற்படை தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை இராணுவ வழங்கல் மற்றும் சேவை கல்லூரியின் மாணவர் அதிகாரிகள், இலங்கை விமானப்படை கனிஷ்ட உத்தியோகஸ்தர் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் மாணவர் அதிகாரிகள் மற்றும் 31 வது கனிஷ்ட அதிகாரி பணியாளர்கள் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பாடநெறியைச் சேர்ந்த மாணவர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.