இலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்படும்

இலங்கை கடற்படையின் ஆரம்பநிலை பயிற்சி நிலையங்களில் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் பிரகாரம், பூனேவைஇலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிறுவனத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கல்வி கட்டிடம் இன்று (2022 அக்டோபர் 07) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிறுவனம் கடற்படை ஆரம்பநிலை மாலுமிகளின் பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் மாலுமிகளுக்கான மேம்பட்ட படிப்புகளுக்கான பிரதான பயிற்சி நிறுவனமாகும், இதன் மூலம் ஆரம்ப பயிற்சியின் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பயிற்சி மாலுமிகள் கடற்படையில் இணைகின்றனர். இந்த மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுடன் மேலும் இந்த பயிற்சி நிறுவனத்தின் பயிற்சிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் வகையில் இரண்டாவது தளத்தின் கட்டுமானம் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அதன் படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் கடற்படையினரின் தொழிநுட்ப பங்களிப்புடன் மூன்று மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவுசெய்து இன்று (2022 ஒக்டோபர் 07) கடற்படைத் தளபதியின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. விரிவுபடுத்தப்பட்ட உள்கட்டமைப்புகள் எதிர்காலத்தில் கல்வி நிறுவனத்தின் பயிற்சி நடவடிக்கைகளை மிகவும் திறமையாகவும், திறம்படவும் மேற்கொள்ள உதவும்.

තවද, மேலும், இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்ட கடற்படைத் தளபதி, இலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிறுவன வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டதுடன், பயிற்சி நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பூப்பந்து மைதானத்தையும் பார்வையிட்டார்.

இந் நிகழ்வுக்காக வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, இலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிறுவனத்தின் தளபதி மற்றும் கட்டளை அதிகாரி கேப்டன் அருண வீரசிங்க உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.