கடற்படையின் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை மொரயாய மஹா வித்தியாலயத்தில் வசதிகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையினரால் அபிவிருத்தி செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை மொரயாய மஹா வித்தியாலயத்தில் வகுப்பறை கட்டிட வசதிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இன்று (2022 ஒக்டோபர் 05) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில், குறைந்த வசதிகளை கொண்ட பாடசாலைகளை மேம்படுத்தும் கடற்படை சமூக நலத் திட்டத்தின் கீழ் கடற்படையின் நிதி மற்றும் தொழில்நுட்ப பங்களிப்புடன், தெற்கு கடற்படைக் கட்டளைத் தளபதியின் மேற்பார்வையில், மொரயாய மஹா வித்தியாலயத்தில் வகுப்பறை வசதிகள் மேம்பாடு நடவடிக்கைகள் 2022 ஜூலை 29 ஆம் திகதி தொடங்கப்பட்டது. அதன்படி கடற்படையினரின் பங்களிப்பில் நவீனமயப்படுத்தப்பட்ட கல்லூரியில் 03 வகுப்பறைகள் கொண்ட பழைய கட்டிடம் மற்றும் கட்டிடத்தை அண்டிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 02 வகுப்பறைகள் இவ்வாறு கடற்படை தளபதி தலைமையில் இன்று (2022 அக்டோபர் 05) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
கல்லூரிக்கு வருகை தந்த கடற்படைத் தளபதியை மொரயாய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மிகவும் அன்புடன் வரவேற்க ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மொறயாய கல்லூரியின் அதிபர் திரு.சிந்தன கீபதி, கல்லூரியின் வகுப்பறை வசதிகளை மேம்படுத்தி குழந்தைகளின் எதிர்கால கல்விக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதில் கடற்படையினர் ஆற்றி வரும் பங்களிப்பை பெரிதும் பாராட்டுவதாக தெரிவித்தார். கடற்படைத் தளபதி உட்பட முழு கடற்படையினருக்கும் தனது பாராட்டுக்களை வழங்குவதாகவும் அறிவித்தார்.
மேலும், கல்லூரியின் நூலகத்திற்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் கடற்படைத் தளபதி அன்பளிப்பு செய்தார். அத்துடன், கடற்படையினரின் பங்களிப்புடன் வசதிகளை மேம்படுத்தி மாணவர்களுக்கு அவற்றை குறுகிய காலத்தில் கிடைக்கச் செய்வதற்கு பங்களிப்புச் செய்த கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
கடற்படை பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியலாளர் ரியர் அட்மிரல் ரவீந்திர மெதகொட, தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஹரீந்திர ஏகநாயக்க மற்றும் அந்த கட்டளையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், வலஸ்முல்ல பிராந்திய கல்வி பணிப்பாளர் சி.யு.வீரசேகர, மொரயாய கல்லூரியின் அதிபர் திரு.சிந்தன கீபதி உட்பட கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.