இந்தியாவில் உள்ள கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகராக இந்தியாவில் உள்ள கொரிய தூதரகத்தில் பணிபுரியும் லெப்டினன்ட் கேர்ணல் ஹான் ஜொங்ஹுன், (Lt. Col Han Jonghun) இன்று (2022 அக்டோபர் 04) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இந்தியாவில் உள்ள கொரிய தூதரகத்தின் இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகராக லெப்டினன்ட் கேர்ணல் ஹான் ஜியோங்ஹூன், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்னவை சந்தித்த முதல் உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும். அங்கு அவர்கள் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடலை நடத்தினர்.
மேலும், இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.