P 627 என்ற ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் இலங்கை நோக்கிச் செல்லும் வழியில் குவாமில் உள்ள அப்ரா துறைமுகத்தை வந்தடைந்தது.
அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு 2022 செப்டம்பர் 03, அன்று தனது பயணத்தைத் தொடங்கிய P627 ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல், 2022 அக்டோபர் 02, அன்று அமெரிக்காவின் குவாமில் (Guam) உள்ள அப்ரா (Apra) துறைமுகத்தை வந்தடைந்தது.
அமெரிக்காவின் கடலோர காவல்படை திணைக்களத்திற்கு சொந்தமான 'டக்ளஸ் முன்ரோ' (EX USCGC Douglas Munro) என்ற அமெரிக்க கடலோர காவல்படை கப்பல் 2021 அக்டோபர் 26 அன்று உத்தியோகபூர்வமாக இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. Pennant Number P 627 இன் கீழ் இலங்கை கடற்படையில் இணைந்த பின்னர், இந்த ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல், இலங்கை கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்றவாறு நவீனமயமாக்கப்பட்ட பின்னர், அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்தில் இருந்து 2022 செப்டம்பர் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கான பயணம் தொடங்கியது.
அதன்படி, P 627 என்ற கப்பல், பசிபிக் பெருங்கடலில் சுமார் 5898 கடல் மைல்கள் (சுமார் 10923 கி.மீ) தூரம் பயணித்து, 2022 அக்டோபர் 02 ஆம் திகதி பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்காவின் குவாமில் உள்ள அப்ரா துறைமுகத்தை வந்தடைந்தது.
மேலும், P 627 கப்பல் தனது அடுத்த விநியோகத் தேவைகளுக்காக பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா (Manila) மற்றும் சிங்கப்பூரில் உள்ள சாங்கி (Changi) துறைமுகங்களுக்கு சென்ற பின்னர் 2022 நவம்பர் முதல் வாரத்தில் கொழும்பு துறைமுகத்திற்கு வரவிருக்கிறது.