247 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 333 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 247 ஆம் ஆட்சேர்ப்புக்கான 333 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2022 அக்டோபர் 01 ஆம் திகதி பூனாவை இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

இலங்கை கடற்படை கப்பல் சிக்‌ஷா நிறுவனத்தின் தளபதியும் கட்டளை அதிகாரியுமான கேப்டன் அருண வீரசிங்கவின் அழைப்பின் பேரில். கடற்படை பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள், ரியர் அட்மிரல் பிரசன்ன மஹவிதான இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேலும் இப் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் அவரால் வழங்கப்பட்டன.

அதன் படி 247 வது ஆட்சேர்ப்பில் சிறந்த பயிட்சியாளருக்கான விருதை கடற்படை வீரர் எஸ்.யூ.எல் த சில்வா பெற்றுள்ளார். சகல பாடங்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை கடற்படை வீரர் பீ.ஜி.எஸ்.டப் ஹேமந்த பெற்றுள்ளார். மேலும், கடற்படை வீரர் டப்.ஏ.ஆர் லக்‌ஷான் சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றுள்ளதுடன் ஜே.வி.டி கௌமது சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பெற்றுள்ளார். இதேவேளை, 247 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக ‘’வசப” பிரிவு தெரிவு செய்யப்பட்டது.

அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்த கடற்படையினரை உரையாற்றிய கடற்படை பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள், ரியர் அட்மிரல் பிரசன்ன மஹவிதான முதலில் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், மேலும், இலங்கைக்கு சொந்தமான கடல் வலயத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கடல் வழியாக நாட்டுக்கு ஏற்படும் சவாலை ஒடுக்கவும், நிலத்தை விட 27 மடங்கு பெரிய இலங்கையின் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் பாதிக்கப்படுகின்ற கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திக்கு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விசேட பொறுப்பொன்று உள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன், இலங்கை கடற்படை நாட்டின் தேசிய அபிவிருத்திக்கு தோள் கொடுப்பதுடன், நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு கடற்படையின் வளங்களை அதிகபட்ச வினைத்திறனுடன் பயன்படுத்துவதன் மூலம் பாரிய பணியை மேற்கொண்டு வருகின்றதாகவும் வெளியேறிச் செல்லும் கடற்படையினர் பயிற்சியின் மூலம் பெற்ற திறன்கள் மற்றும் ஒழுக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் எதிர்காலத்தில் கடற்படையின் கடமைகள் மற்றும் பணிகளை நிறைவேற்ற உறுதியுடன் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். என்று கூறினார்.

மேலும், கடற்படை இசைக்குழு மற்றும் கலாசார குழுவின் நிகழ்ச்சிகளால் இந்த வண்ணமயமான காட்சி மிகவும் கவர்ந்தது.

இந்த வெளியேறல் அணிவகுப்புக்காக கெளரவ மகா மகாசங்கத்தினர், வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரதீப் ரத்னாயக்க, கடற்படை தலைமையகத்தின் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் மற்றும் வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர்.