திருகோணமலை சாம்பூரில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இறங்குதுறை திறந்து வைக்கப்பட்டுள்ளது
திருகோணமலை தெற்கு கடல் பகுதியில் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில், சாம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'மரைன் பியர்' (Marine Pier) என்ற சிறிய படகுகள் நிருத்தும் இறங்குதுறை 2022 செப்டெம்பர் 26 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்னவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரைக்கு அமைவாக கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்னவின் மேற்பார்வையின் கீழ் இந்த இறங்குதுறையின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வசதியை நிர்மாணித்ததன் பிரதான நோக்கம் திருகோணமலை தெற்கு கடற்பகுதியில் ரோந்து செல்லும் சிறிய கப்பல்களுக்கும் இலங்கை கடற்படை பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் கப்பல்களுக்கும் இறங்குதுறை வசதிகளை விரிவுபடுத்துவதாகும்.
இதன்படி, கடற்படையின் திறமையான மனிதவளம் மற்றும் தொழில்துறை நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் முடிக்கப்பட்ட இந்த புதிய இறங்குதுறைக்கு 'மரைன் பியர்' (Marine Pier) என பெயரிடப்பட்டு 2022 செப்டம்பர் 26 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. குறித்த இறங்குதுறை சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, சிறிய கப்பல்களால் மேற்கொள்ளப்படும் ஊடுருவல் ரோந்துகள், செயல்பாடுகள் மற்றும் மரைன் படைப்பிரிவின் சிறிய கப்பல்களின் பயிற்சி நடவடிக்கைகள் மிகவும் திறமையாக மேற்கொள்ள பெரும் உதவியாக இருக்கும்.
இந்த புதிய இறங்குதுறையை திறந்து வைப்பதற்காக, கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகம் மற்றும் இலங்கை கடற்படை கப்பல்கள் விதுர நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட கடற்படை வீரர்கள் கலந்துகொண்டனர்.