கடற்படை வரலாற்றில் முதல் முறையாக, அடிப்படை சுழியோடிகளுக்கான பயிற்சிநெறியை முடித்த பெண் மாலுமிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை வரலாற்றில் முதல் தடவையாக அடிப்படை சுழியோடிகளுக்கான பயிற்சிநெறியை வெற்றிகரமாக முடித்த மூன்று (03) பெண் பணியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2022 செப்டெம்பர் 24 ஆம் திகதி கடற்படை கப்பல்துறையில் தளபதி கொமடோர் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் உள்ள கடற்படையின் சுழியோடுதல் பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்வின் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் சுழியோடுதல் பயிற்சியில் ஈடுபட ஆர்வமுள்ள கடற்படைப் பெண்களுக்கான வாய்ப்பை உருவாக்குவதற்காக இந்தப் பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, விண்ணப்பித்த பெண் மாலுமிகளில் இருந்து அடிப்படை சுழியோடிகளுக்கான பயிற்சிநெறியை மேற்கொள்வதற்குத் தேவையான உடல் தகுதியுடன் இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் மற்றும் ஒரு பெண் மாலுமி உட்பட மூன்று பெண் பயிற்சியாளர்களை 2022 செப்டம்பர் 05 ஆம் திகதி திருகோணமலை சுழியோடுதல் பயிற்சி பாடசாலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டது. அதன் படி சேர்த்துக்கொள்ளப்பட்ட இவர்கள் 20 நாட்கள் கொண்ட அடிப்படை சுழியோடி பாடநெறியை 24 செப்டம்பர் 2022 அன்று வெற்றிகரமாக பூர்த்தி செய்தார்கள். அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை கடற்படை சுழியோடுதல் பயிற்சி பாடசாலையில் இடம்பெற்றது.

இலங்கை கடற்படையின் சுழியோடுதல் பிரிவு 1962 இல் ஸ்தாபிக்கப்பட்டதுடன் மேலும் கடற்படை சுழியோடியர்களுக்கு முறையான சுழியோடி பயிற்சியை வழங்கும் நோக்கத்துடன், கடற்படை சுழியோடுதல் பயிற்சி பாடசாலை 1998 இல் திருகோணமலை கடற்படை தளத்தில் நிறுவப்பட்டது. கடற்படை சுழியோடி பிரிவு தினசரி சுழியோடி ஆதரவு நடவடிக்கைகளுக்கு பங்களிக்கிறது, மேலும் நீருக்கடியில் ஆய்வுகள், பழுதுபார்ப்பு, பராமரிப்பு, மீட்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு அனுமதிகள், நீருக்கடியில் கட்டுமானம், நீருக்கடியில் கணக்கெடுப்பு, நீருக்கடியில் தேடல் மற்றும் மீட்பு, அத்துடன் அரசு மற்றும் தனியார் துறைக்கு கடற்படை சுழியோடி பிரிவு பங்களிக்கின்றன.

மேலும், அடிப்படை அடிப்படை சுழியோடிகளுக்கான பயிற்சிநெறியை முடித்த முதல் பெண் மாலுமிகளை எதிர்காலத்தில் அவர்களின் சுழியோடி நிபுணத்துவத்தின் அடிப்படையில் தேவைக்கேற்ப சுழியோடி நடவடிக்கைகளுக்காக அனுப்ப கடற்படை எதிர்பார்க்கப்படுகிறது.