தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் முதல் தேசிய பாதுகாப்பு பாடநெறியை முடித்த கடற்படை அதிகாரிகள், தமது புதிய நியமனங்களைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக கடற்படைத் தளபதியை சந்தித்தனர்.
கொழும்பு தேசிய பாதுகாப்பு கல்லூரியால் நடத்தப்பட்ட முதலாவது தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த கடற்படை அதிகாரிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று (2022 செப்டெம்பர் 23) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர். குறித்த பாடநெறியின் சம்பிரதாயமான பட்டமளிப்பு நிகழ்வு கடந்த 2022 செப்டம்பர் 14 ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
தேசிய பாதுகாப்புத் துறையின், முப்படையின், காவல்துறை மற்றும் பொதுச் சேவையின் மூத்த அதிகாரிகளின் மூலோபாயத் திறனை மேம்படுத்துவதற்கான முன்னணி நிறுவனமாக நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்புக் கல்லூரி (National Defence College – NDC) கடந்த 2021 நவம்பர் 11 ஆம் திகதி திறக்கப்பட்டது. அதன்படி, இந்தப் பாடநெறியைத் தொடங்குவதற்கு முன்னர், இந்த அதிகாரிகள், இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துடன் ஒருங்கிணைத்து ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு அகாடமியின் விரிவுரையாளர்கள் குழுவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘Managing Defence in the Wider Security Context (MDWSC) பாடத்திட்டத்தை பாடநெறியையும் மேற்கொண்டனர்.
தேசிய பாதுகாப்பு பாடநெறியானது தற்போதைய தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள், தேசிய பாதுகாப்பு மற்றும் கொள்கைகளை பாதிக்கும் சூழ்நிலைகள், 08 பாடங்களின் கீழ் இரண்டு காலாண்டுகளை உள்ளடக்கிய ஆய்வுகள் பற்றிய முடிவெடுப்பதற்கான மூலோபாய விருப்பங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பல கற்றல் வாய்ப்புகளை உள்ளடக்கியது.
முதல் தேசிய பாதுகாப்பு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கடற்படை அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 23, 2022) கடற்படைத் தளபதியை சந்தித்தபோது, கடற்படைத் தளபதி அவர்களை வாழ்த்தினார். எதிர்கால முன்னேற்றத்திற்காக அறிவை முறையாக நிர்வகிக்க ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், இந்த பாடநெறியில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவுக்கு கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராட்டு விருதினை வழங்கி வைத்தார்.