யாழ்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கடற்படை உதவி
யாழ்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு குமண தேசிய பூங்கா நுழைவாயிலிலிருந்து கும்புக்கன் ஓயா வரையிலான பகுதியில் தேவையான வசதிகளை இவ்வருடம் கடற்படையால் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் படி, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் அறிவுறுத்தளுக்கமைய தென்கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும அவர்களின் வழிகாட்டுதளுடன் குமண முதல் கும்புக்கன் ஓயா வரையிலான பாதையில் செல்லும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், உயிர்காக்கும் சேவைகள் மற்றும் இதர வசதிகளை வழங்குவதற்காக தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை விரர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இலங்கை கடற்படையின் சமூக சேவையாக மேற்கொள்ளப்படுகின்ற இந்த சேவை குமண தேசிய பூங்காவின் நுழைவாய், பாத யாத்திரைக்காக திறந்திருக்கும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி வரை தொடர்ந்து வழங்குவதற்கு இலங்கை கடற்படை தயாராக உள்ளது.