பலுகஸ்வெவ மைத்திரிகம பகுதியில் கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாக அனுராதபுரம், பலுகஸ்வெவ, மைத்திரிகம பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 2022 ஜூலை 24 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுகாதார அமைச்சின் அனுசரணையில் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவளப் பங்களிப்போடு கடற்படையின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு பாரிய சமூக சேவையாகும்.
இதன்படி, கடற்படையினரால் அனுராதபுரம், பலுகஸ்வெவ மைத்திரிகம பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 2022 ஜூலை 24 ஆம் திகதி இவ்வாரு திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் பலுகஸ்வெவ மைத்திரிகம பிரதேசத்தில் உள்ள சுமார் 600 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை இலகுவாக பெற்றுக் கொள்ள உதவும்.