திருகோணமலை போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு பாதுகாப்பு செயலாளர் அஞ்சலி செலுத்தினார்
திருகோணமலை கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவுத் தூபிக்கு முன்பாக போரில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூரும் நிகழ்வொன்று இன்று காலை (2022 ஜூலை 23) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்னவின் தலைமையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றதுடன் அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் போர்வீரர் நினைவுத்தூபிக்கு மலர்க்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அறிவுறுத்தலின் பேரில், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, இன்று (ஜூலை 23, 2022) காலை இந்த போர்வீரர் நினைவேந்தல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். ஏறக்குறைய முப்பது வருடங்களாக இந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த கடற்படை வீரர்கள் உட்பட அனைத்து போர்வீரர்களையும் நினைவுகூரும் வகையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் போர்வீரர்கள் நினைவுத் தூபிக்கு முன்னிலையில் மலர்க்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும், கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.