தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும இன்று (2022 ஜூன் 24) கட்டளைத் தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர், ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும கடற்படை தலைமையகத்தில் நிர்வாக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றினார். தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதி ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெருமவை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டதுடன் தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பதில் கட்டளைத் தளபதி கொமடோர் ஹர்ஷ டி சில்வாவினால் தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து நியமனம் தொடர்பான கடமைகளையும் பொறுப்புகளையும் ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெருமவுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.