கடற்படை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தளபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவை இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக 2021 ஜூன் 21 திகதி முதல் அமல்படுத்தினார். அதன்படி, இது தொடர்பான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா பண்டாரவளை மத்திய கல்லூரியின் சிறந்த பழைய மாணவர் ஆவார். அவர் 1986 இல் இலங்கை கடற்படையின் நிர்வாக பிரிவில் 15 வது கேடட் ஆட்சேர்ப்புக்கான கேடட் அதிகாரியாக சேர்ந்தார். அவர் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தனது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து 1988 ஆம் ஆண்டில் துணை லெப்டினனாக நியமிக்கப்பட்டார். மேலும் 1989 ஆம் ஆண்டில் இந்தியாவில் தனது துணை லெப்டினன்ட் தொழில்நுட்ப பாடநெறியை முடித்த அவர் இந்தியாவின் ஐஎன்எஸ் வெந்துருத்தியில் (INS Venduruthy) இருந்து கடல்சார் தகவல்தொடர்புகளில் நிபுணத்துவமும் பெற்றார். அப்போதிருந்து, அவர் படிப்படியாக தனது கடற்படை வாழ்க்கையில் அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்த்தப்பட்டதுடன் இறுதியாக 2019 மே 03 ஆம் திகதி ரியர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
அவர் தனது பதவிக் காலத்தில், இலங்கை கடற்படையின் கப்பல்கள், படகுகள் மற்றும் நில நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகித்தார். மேலும், அவர் இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிறுவனத்தின் தளபதி, கடற்படை பயிற்சி பிரதி பணிப்பாளர், இலங்கை கடலோர காவல்படையின் பிரதி பணிப்பாளர் நாயகம், கடற்படை ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர், வட மத்திய கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி, பாதுகாப்புப் படைகளின் பிரதானியின் அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் கடற்படை மற்றும் விமானப் போக்குவரத்து செயல்பாடுகள், இயக்குனர் கடற்படை சமிக்ஞைகள், கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி மற்றும் திருகோணமலை துறைமுக வசதியின் பாதுகாப்பு அதிகாரி, கடற்படை ஏவுதல் கட்டளையின் கொடி அதிகாரி, தன்னார்வ கடற்படைத் தளபதி, பணிப்பாளர் நாயகம் பணியாளர்கள் மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ஆகிய பதவிகளை வகித்தார். மேலும், ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா கடற்படை தலைமை அதிகாரி ஆவதற்கு முன்னர் கடற்படையின் பிரதித் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றினார்.
ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா 2003 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள கடற்படைக் கல்லூரியில் கடற்படைப் பணியாளர் கல்லூரியில் கட்டளை மற்றும் பணியாளர்களைப் பயின்றார். மேலும், 2011 ஆம் ஆண்டில் பாதுகாப்பு மேலாண்மை பாடநெரி இந்தியாவிலும், 2013 ஆம் ஆண்டில் குழு கட்டளை அதிகாரி பாடநெரி சீனாவிலும் வெற்றிகரமாக முடித்தார். மேலும் 2017 ஆம் ஆண்டில் சீனாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாதுகாப்பு மற்றும் மூலோபாயம் ஆய்வு பற்றிய முதுகலைப் பட்டம் பெற்றார்.
கடற்படையில் அவரது வாழ்க்கை பல விருதுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எதிரியை எதிர்கொள்வதில் திறமையான மற்றும் துணிச்சலான செயல்பாட்டிற்காக, ரண விக்கிரம பதக்கம (RWP) மற்றும் ரணசூர பதக்கம (RSP) வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக, அவர் களங்கமற்ற தன்மைக்காக உத்தம சேவா பதக்கம (USP) பெற்றவர். குறித்த சிரேஷ்ட அதிகாரி கடற்படைத் தளபதியினால் சிறந்த கடமைச் செயல்பாடுகள் மற்றும் கடற்படை சேவையில் சிறப்பான பங்களிப்புகளுக்காக மூன்று முறை பாராட்டப்பட்டுள்ளார்.
ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா திருமதி ஷ்யாமா திலகரத்னவை திருமணம் செய்து கொண்டதுடன் அவர்களுக்கு ஒரு மகளும் (தருஷி 29) ஒரு மகனும் (பசிந்து 27) உள்ளனர்.