2566 ஆவது ஸ்ரீ சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்ச்சித் தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது
2566 ஆவது ஸ்ரீ சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்ச்சித் தொடர் 2022 ஜூன் 16 ஆம் திகதி வெற்றிகரமாக முடிவடைந்தது.
இலங்கை கடற்படையினர் கடற்படை கட்டளைகள் ஏலும் உள்ளடக்கி ஒன்பது இரத்த தான நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த உன்னதமான சமூக நல திட்டத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் கிழக்கு கடற்படை கட்டளை மூலம் 2022 மே 16 மற்றும் 30 ஆம் திகதிகளில் இரத்ததான நிகழ்ச்சியொன்றை நடத்தப்பட்டது. மேலும் 2022 மே 17, 20, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் முறையே தெற்கு, வடக்கு, தென்கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்படைக் கட்டளைகளை மையமாகக் கொண்டு பழ இரத்ததான நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வடமத்திய கடற்படை கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி ஜூன் 10 ஆம் திகதி நடத்தப்பட்டது, இந்த இரத்த தான திட்டத்தின் கீழ் மேற்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சிகள் 2022 ஜூன் 08 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெற்றதுடன் இந்த உன்னத சமூக சேவை வெற்றிகரமாக நிறைவுற்றது.
தீவு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் இரத்த வங்கிகளுக்கு மிகவும் தேவையான இரத்த இருப்புக்களை நிரப்புவதை நோக்கமாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுகள், அந்தந்த பகுதி கடற்படை கட்டளை தளபதிகள் இரத்த வங்கிகளுடன் ஒருங்கிணைந்து கடற்படை கட்டளை மருத்துவ ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டன. அனைத்து கடற்படை கட்டளைகளிலிருந்தும் ஏராளமான கடற்படை வீரர்கள் தானாக முன்வந்து இந்த மகத்தான நோக்கத்திற்கு ஆதரவாக இரத்தம் வழங்கினர்.