கடல்சார் நிறுவனத்தின் இலங்கைக் கிளை தனது 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட கடல்சார் நிறுவனத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் இலங்கைக் கிளை 2022 இல் தனது 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. ஐக்கிய இராச்சிய கப்பல் கூட்டுத்தாபனத்தின் இலங்கைக் கிளை இலங்கை கடற்படை மற்றும் வணிகக் கப்பல் நிறுவனங்களின் உறுப்பினர்களைக் கொண்ட இலங்கையின் ஒரே கடல்சார் அமைப்பாகும்.

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள கடல்சார் நிறுவனத்தின் இலங்கைக் கிளை 20 அக்டோபர் 1992 இல் கப்பல் துறையில் ஈடுபடுபவர்களின் திறன் மற்றும் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்டது. கடல்சார் தொழில் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் பல்வேறு கருப்பொருள்கள் பற்றிய கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் கிளை தனது நோக்கங்களை தொடர்ந்து அடைந்து வருகிறது.

அதன்படி, இலங்கைக் கிளை அடுத்த 20 வருடங்களுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தனது 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2022 ஜூன் 18 ஆம் திகதி கொழும்பு 07 OPA, வளாகத்தில் நடைபெறவுள்ள 30வது வருடாந்த பொதுக்கூட்டம், கிளை வருடாந்த விருது வழங்கும் விழா மற்றும் இளைஞர் மன்ற செயற்பாடுகளில் கலந்துகொள்ளுமாறு கடல்சார் நிறுவனத்தின் இலங்கைக் கிளை தனது பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை அழைக்கிறது.

ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட கடல்சார் நிறுவனம் சர்வதேச கடல்சார் அமைப்பின் ஆலோசனை அந்தஸ்து கொண்ட ஒரு அரசு சாரா அமைப்பாகும், இது கடல்சார் தொழிலில் தொழில்முறை, நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் அதன் உறுப்பினர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு, அதன் உறுப்பினர்களை தொடர்ந்து அதிகரித்து வருகின்றதுடன் கப்பல்கள் மற்றும் பிற கடல்சார் விஷயங்களில் தொழில் ரீதியாக ஆர்வமுள்ள அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளது.

கடல்சார் துறையில் தொழில்முறை மேம்பாட்டின் மூலம் சிறந்த தலைமைத்துவத்தை செயல்படுத்துவதற்கான யோசனைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வதற்கான வழிகளை ஆராய்வதன் மூலம் அடுத்த 20 வருடங்களை வடிவமைப்பதில் இணையுமாறு ஐக்கிய இராச்சியத்தின் கடற்படைத் தளத்தின் இலங்கைக் கிளை அணைவரையும் அழைக்கிறது. உறுப்பினர் எண்ணிக்கையில் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கத்தில், அனைத்து கடற்சார் நடைமுறை கடல்வழி மற்றும் சட்ட அறிவை மாற்றுவதற்காக இளைஞர் மன்றம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. கடலோடி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இளைஞர் மன்றத்தில் இலவசமாக சேர தகுதியுடையவர்கள்.