கடற்படையின் சேவா வனிதா பிரிவு பொசன் போயா தினத்தை முன்னிட்டு சமய நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

மிஹிந்து தேரர் இலங்கைக்கு வந்ததை நினைவு கூறும் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 2022 ஜூன் 14 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன அவர்களின் தலைமையில் சில் வைபவம் நிகழ்வு இடம்பெற்றதுடன் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன அவர்களின் அழைப்பின் பேரில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன அவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையில் உள்ள கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக, அவர்களின் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையிலிருந்து விலகி, அவர்களின் ஆன்மீக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் வகையில் 2022 ஜூன் 14 ஆம் திகதி பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த சில் வைபவம் நிகழ்வு ஹெவிசி மற்றும் புத்த பூஜைக்கு மத்தியில் புனித நினைவுச்சின்னங்கள் கொண்டு வரப்பட்ட பின்னர் தொடங்கியது.

குறித்த சில் வைபவம் நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட தர்ம விரிவுரை, தர்ம கலந்துரையாடல் மற்றும் தியானம் (மைத்திரி பவனம்) நிகழ்வுகள் வண. ஹிங்குரே பஞ்ஞாசேகர தேரர், வண. நெலுவாகந்தே ஞானானந்த தேரர், வண. களனி விபுலஞான தேரர், வண. கும்பக்கடவர சுதீர தேரர், வண. மாலிம்பட பஞ்ஞாசேகர தேரர், வண. மிராவத்தே பஞ்ஞாசிறி தேரர் மற்றும் வண. கஹகொல்லே சோமவன்ஷ தேரர்களால் நடத்தப்பட்டது.

போயா தின சில் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கடலை, இஞ்சி தேநீர் மற்றும் ஐஸ்கிரீம் தன்சல கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டதுடன் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன அவர்களின் அழைப்பின் பேரில், சில் நிகழ்ச்சி மற்றும் தன்சலை திறப்பு விழா ஆகிய இரண்டிலும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன கழந்து கொண்டார். மேலும், கொடி நிலை அதிகாரிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவின் குழு உறுப்பினர்கள், இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரமவின் கட்டளை அதிகாரி, மூத்த மற்றும் இளைய அதிகாரிகள், மேற்கு கடற்படை கட்டளையில் உள்ள கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் மாலுமிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.