பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
எயார் கொமடோர் அக்தார் இம்ரான் சதோசாய் (Air Commodore Akhtar Saddozai) தலைமையிலான பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று (2022 ஜூன் 07) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
அதன்படி, 2022 ஜூன் 6 ஆம் திகதி காலை 06 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் முப் படையின் 17 சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவைச் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இலங்கை கடற்படையின் பணி மற்றும் நடவடிக்கைகள் குறித்து கடற்படை நடவடிக்கைகளின் பணிப்பாளர் கொமடோர் நிஷாந்த பீரிஸ் அவர்களினால் வருகை தந்த குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள், ரியர் அட்மிரல் பிரசன்ன மஹாவிதான மற்றும் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஆகியோருடன் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் தூதுக்குழுவின் உறுப்பினர்கள் தகவல் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.