ரிம் ஒப் த பெசிபிக் - 2022 (RIMPAC) பலதரப்பு கடல்சார் பயிற்சிக்காக கடற்படை குழுவொன்று தீவை விட்டு வெளியேறியது
அமெரிக்க கடற்படையின் பசிபிக் கப்பல் குழுவால் (US Pacific Fleet) நடத்தப்படும் Rim of the Pacific 2022 (RIMPAC 2022) பலதரப்பு கடல்சார் பயிற்சியில் பங்கேற்க 50 அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் அடங்கிய இலங்கை கடற்படைக் குழு இன்று காலை (ஜூன் 04, 2022) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படையின் விசேட விமானத்தில் அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டது. அங்கு ரோயல் அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான கென்பரா (HMAS Canberra) கப்பலின் உறுப்பினர்களுடன் இனைந்து இலங்கை கடற்படை மரைன் படையணி இரண்டு வார பயிற்சியின் பின்னர் அமெரிக்கா, ஹவாய் மற்றும் தெற்கு கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் RIMPAC 2022 கடல்சார் பயிற்சியில் பங்கேற்கும்.
இந்த பலதரப்பு கடல்சார் பயிற்சிக்காக பிராந்தியத்தில் உள்ள பெரிய எண்ணிக்கையிலான நாடுகளைச் சேர்ந்த 25,000 க்கும் மேற்பட்ட நபர்களுடன் ஏராளமான போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் கடற்படைகளையும் உள்ளடக்கும், மேலும் பயிற்சிகள் 2022 ஜூன் மற்றும் ஜூலை இடையில் நடைபெறும்.
ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் அனுசரணையின் கீழ் இந்த பயிற்சிக்காக இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி 48 மரைன் கடற்படையினர் மற்றும் 02 சிறப்பு படகுகள் படையணியின் கடற்படையினர் கழந்துகொள்கின்றனர். இந்த வீர்ர்கள் தீவை விட்டு வெளியேறுவதற்கு முன் தேசியக் கொடிகளை அணிவித்தல் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் 2022 ஜூன் 02 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், 28வது முறையாக நடத்தப்படுகின்ற பல்துறை கடல்சார் பயிற்சியான RIMPAC 2022 இல் பங்கேற்பதன் மூலம், நாட்டின் முதல் பாதுகாப்பு வளையமாக அனைத்து கடல்சார் பணிகளுக்கான புதிய அறிவு, உத்திகள் மற்றும் அனுபவங்களை பரிமாறிக்கொள்ளவும், அத்துடன் புதிய கடல்வழியை அடையாளம் காணவும் இலங்கை கடற்படைக்கு உதவும். சவால்களுக்கு கூட்டாக தீர்வு காண முடியும்.