மன்னார் மற்றும் ஆறுகம்பே கலப்பு கரை பகுதிகள் உள்ளடக்கி கடற்படையினரால் கண்டல் தாவரக் கன்றுகள் நடுகை

இலங்கை கடற்படையின் கண்டல் தாவரக் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மன்னார் மற்றும் ஆறுகம்பே கலப்பு கரை பகுதிகளில் கண்டல் தாவரக் நடுகை நிகழ்வொன்று மே 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மேட்கொள்ளப்படுகின்ற இலங்கை கடற்படையின் கண்டல் தாவரக் பாதுகாப்புத் திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக வட மத்திய கடற்படைத் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் மேற்பார்வையில் குறித்த கட்டளையில் உள்ள நிருவனங்கள் மூலம் 1200 கண்டல் தாவரக் கன்றுகள் கடற்கரையில் நடப்பட்டன. மேலும், தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மஹிந்த மஹவத்த அவர்களின் மேற்பார்வையின் கீழ், குறித்த கட்டளையில் உள்ள ஆறுகம்பே பகுதியை உள்ளடக்கி 250 கண்டல் தாவரக் கன்றுகள் நடப்பட்டன.

குறித்த கண்டல் தாவரக் கன்றுகள் நடும் திட்டங்களுக்காக வட மத்திய மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளைகளுக்கு சொந்தமான பல நிருவனங்களில் கடற்படையினர் கழந்துகொண்டனர்.