தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் விழா அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது
2022 தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் விழா, முப்படைகளின் சேனாதிபதி, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (2022 மே 19) பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.
ரணவிரு சேவா அதிகாரசபை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரஞ்சன் லமாஹேவகே, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நந்தன சேனாதீர உட்பட முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் ரணவிரு சேவா அதிகார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை தாய்நாட்டிலிருந்து ஒழிப்பதன் மூலம் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தேசிய போர்வீரர்களின் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு பாதுகாப்பு செயலாளர், முப்படைத் தளபதிகள் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.