ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்
ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன கடற்படையில் 34 வருட கால சேவையை முடித்து இன்று (மே 04, 2022) கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றார்.
இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.
1987 ஆம் ஆண்டு 17வது கெடட் ஆட்சேர்ப்பின் அதிகாரியாக கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன, தனது 34 வருடங்களுக்கும் மேலான பதவிக் காலத்தில் பல்வேறு கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். அவர் கடற்படைக் கொள்கை மற்றும் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர், கடற்படை நிர்வாகப் பணிப்பாளர், வடக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி மற்றும் காங்கேசன்துறை துறைமுக வசதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரி, வடமேற்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி, மேற்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி, கொழும்பு துறைமுக வசதிகள் மற்றும் பாதுகாப்பு சேவையின் அதிகாரி. தன்னார்வ கடற்படைத் தளபதி போன்ற உயர் பதவிகளை வகித்த ஒரு புகழ்பெற்ற மூத்த அதிகாரி ஆவார்.