இந்திய கடற்படையின் ‘INS Gharial’ கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
இந்திய கடற்படைக்கு சொந்தமான Landing Ship Tank வகையின் ‘INS Gharial’ கப்பல் இன்று (2022 ஏப்ரல் 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் குறித்த கப்பலை வரவேற்கப்பட்டது.
இவ்வாரு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Gharial’ கப்பல், 124.8 மீட்டர் நீளம் கொண்டுள்ளதுடன் 170 பேர் இங்கு உள்ளனர். மேலும் குறித்த கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் சுனில் எஸ் படில் பணியாற்றுகிறார்.
‘INS Gharial’ கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் கடற்படையின் பிரதிப் பணிப்பாலர் மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (2022 ஏப்ரல் 29) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதுடன் குறித்த சந்திப்பின் போது, ‘INS Gharial’ கப்பல் மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அத்தியாவசிய மருத்துவ உதவித்தொகை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட உள்ளது.
තවද, மேலும், ‘INS Gharial’ கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் இரு கடற்படையினருக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர் பங்கேற்ற பின்னர் 2022 மே 1, அன்று INS Gharial கப்பல் தீவை விட்டு வெளியேற திட்டமிடப்பட்டுள்ளது.