244 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 291 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு
இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 244 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 291 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2022 ஏப்ரல் 22 ஆம் திகதி காலி பூஸ்ஸவிலுள்ள இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தின் தலைமை பயிற்சி மைதானத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
கடற்படை துனை பிரதானி ரியர் அட்மிரல் வை.என் ஜயரத்ன இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேலும் இப் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
அதன் படி 244 வது ஆட்சேர்ப்பில் சிறந்த பயிட்சியாளருக்கான விருதை கடற்படை வீரர் பீ.ஏ.டி தனஞ்சய பெற்றுள்ளார். சகல பாடங்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை கடற்படை வீரர் டப்.ஏ.எச்.டி மதுசங்க பெற்றுள்ளார். மேலும், கடற்படை வீரர் எஸ். எம் சம்பத் சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றுள்ளதுடன் ஜே.எம்.டி.டி.ஜெயசிங்க சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை பெற்றுள்ளார். சிறந்த நீச்சல் வீரருக்கான விருது எஸ்.பி.டி சில்வா பெற்றுள்ளார். இதேவேளை, 244 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக ‘’விஜயபாகு” பிரிவு தெரிவு செய்யப்பட்டது. கடற்படை இசைக்குழு மற்றும் கலாசார குழுவின் நிகழ்ச்சிகளால் வண்ணமயமான காட்சி மிகவும் கவர்ந்தது.
அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்த 244 ஆட்சேர்ப்பில் கடற்படையினரை உரையாற்றிய கடற்படைத் துனை தளபதி அவர்களை வாழ்த்திப் பேசியதுடன், அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தமை மாலுமிகளின் கடற்படை வாழ்க்கைக்கு அடித்தளமிட்டுள்ளது. அனைத்து மாலுமிகளும் தங்கள் தொழில் திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி, எதிர்கால கடல்படை வாழ்க்கைக்கு சீரான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் துனைத் தளபதி மேலும் கூறினார். தொடர்ச்சியான பயிற்சி மற்றும் நல்ல உடல் மற்றும் மன உறுதியின் மூலம் தனது தனிப்பட்ட வளர்ச்சியானது கடற்படையின் எதிர்காலத்தில் ஆற்றல் மிக்க மாலுமியாக பங்களிப்பதாகவும், கடற்படையின் எதிர்கால செழுமைக்கு பெரிதும் உதவும் என்றும் அவர் கூறினார்.
இந்த வெளியேறல் அணிவகுப்புக்காக கெளரவ மகா மகாசங்கத்தினர் மற்றும் அனைத்து மதகுருமார்கள், தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சஜித் கமகே, கடற்படையின் பணிப்பாளர் நாயகம் நபர்கள் அனுர தென்னகோன், பணிப்பாளர் பொது சேவைகள் ரியர் அட்மிரல் நெவில் உபயசிரி இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் ஜயநாத் த சில்வா உட்பட கடற்படையின் மூத்த மற்றும் இளநிலை உத்தியோகத்தர்கள், முப்படையினர் மற்றும் பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் கலந்துக்கொண்டனர்.