இலங்கை கடற்படை சங்க செயலகத்தின் முதல் மாடி திறந்து வைக்கப்பட்டுள்ளது
வெலிசர கடற்படை வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை சங்க செயலக கட்டிடத்தின் முதல் மாடி கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை சங்கத்தின் புரவலர் வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இன்று (07 ஏப்ரல் 2022) திறந்து வைக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற மற்றும் கடற்படையின் கௌரவமாக சென்ற 8000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை கடற்படை சங்கம் இலங்கை படைவீரர் சங்கத்துடன் இணைந்த முதன்மையான சங்கங்களில் ஒன்றாகும். இதன்படி கடற்படை சங்கத்தின் நிதியுதவி மற்றும் கடற்படையின் சிவில் பொறியியல் பிரிவின் பங்களிப்புடன் முதல் மாடி நிர்மாணிக்கப்பட்டதுடன் கடற்படை பொது வைத்தியசாலையில் (கொழும்பு) சிகிச்சை பெறுவதற்காக வரும் கடற்படை சங்க உறுப்பினர்கள் உட்பட கடற்படையின் ஏனைய உறுப்பினர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய முதல் மாடியை கடற்படைத் தளபதி இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் அட்மிரல் (ஓய்வு) தயா சந்தகிரி கடற்படைத் தளபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.
இந்நிகழ்வுக்காக இலங்கை கடற்படை சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஷேமல் பெர்னாண்டோ உட்பட சங்கத்தின் உறுப்பினர்கள், கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா கடற்படையின் சிரேஷ்ட ஆலோசகர், சுகாதாரம் மற்றும் போஷாக்கான, தொற்று நோய்கள் பரவுவதைத் தடுத்தல் (COVID19 உட்பட) ரியர் அட்மிரல் (மருத்துவ) ஜி.எஸ்.ஆர். ஜெயவர்தன, கடற்படையின் பணிப்பாளர் நாயகம், கொடி அதிகாரிகள், கடற்படைத் தலைமையகத்தின் மற்றும் வெலிசறை கடற்படை வளாகத்தின் மூத்த மற்றும் இளநிலை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.