2021 கடற்படை பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படை ஆய்வுப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை பேச்சுப் போட்டித்தொடரின் - 2021 (Public Speaking Competition - 2021) இறுதிப் போட்டியில் சிறந்து விளங்கிய கடற்படை வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு கடற்படைத் துனை தளபதி ரியர் அட்மிரல் வை என் ஜயரத்ன தலைமையில் இன்று (2022 ஏப்ரல் 05) கடற்படைத் தலைமையகத்தில் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கடற்படை வீரர்களின் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் என இரண்டு பிரிவுகளின் கீழ் (02) ஆண்டுதோறும் இந்த பேச்சுப் போட்டியை கடற்படை ஆராய்ச்சிப் பிரிவு மூலம் நடத்துகிறது. இன்று (05 ஏப்ரல் 2022) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற அதிகாரிகளுக்கு முறையே ரூ.100,000.00, ரூ.75,000.00 மற்றும் ரூ.50,000.00 ரூபா என பரிசுகளை கடற்படைத் துனை தளபதியவர்களால் வழங்கப்பட்டது.

இதன்படி, சிரேஷ்ட அதிகாரிகள் பிரிவில் முதலாம் இடத்தை லெப்டினன்ட் கமாண்டர் எஸ்.பி.எச்.டி சேனாதீர பெற்றுக்கொண்டார். இதேவேளை, இரண்டாவது இடத்தை லெப்டினன்ட் கமாண்டர் ஈ.எம்.எம்.வி.ஆர். விக்ரமகேயும், மூன்றாம் இடத்தை லெப்டினன் கமாண்டர் டி.வை.ஆர்.ஆர். வீரசேகரவும் பெற்றனர். அதேபோன்று லெப்டினன்ட் கமாண்டர் ஜே.ஏ.எஸ்.டபிள்யூ ஜயசிங்க நான்காவது இடத்தையும் ஐந்தாம் இடத்தை லெப்டினன்ட் கமாண்டர் ஜே.எம்.எச்.ஐ.பண்டாரவும் பெற்றனர்.

இப் போட்டித் தொடரில் இளநிலை அதிகாரிகள் பிரிவில் லெப்டினன்ட் யு.ஜி.ஏ. லக்ஷ்மன் முதலிடத்தையும், லெப்டினன்ட் எம்.இசட் அஹமட் இரண்டாம் இடத்தையும், லெப்டினன்ட் கமாண்டர் எம்.டி.என்.கே. பெர்னாண்டோ மூன்றாம் இடத்தையும், லெப்டினன்ட் ஜீ.வை.கே பெரமுனாரச்சி நான்காவது இடத்தையும் பெற்றனர்.

மேலும், இப் போட்டியின் இறுதி நாள் நடுவர்களாக கடற்படையின் பதில் பணிப்பாளர் நாயகம் கொமடோர் பிரசாத் காரியப்பெரும, கடற்படை பணிப்பாளர் (நபர்கள்) கொமடோர் ரவீந்திர திசேரா, டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல்ஸ் (Toastmasters Internationals) நிருவனத்தின் நிரோஷன் நடராஜா அவர்கள் மற்றும் திருமதி லங்கிகா ஆரியசிங்க ஆகியோர் கழந்துகொண்டனர்.

இந் நிகழ்வுக்காக கடற்படை பிரதி தலைமை அதிகாரி மற்றும் மேற்கு கடற்படை கட்ளையின் தளபதி, ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா, பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள், ரியர் அட்மிரல் பிரசன்ன மஹவிதான, பணிப்பாளர் நாயகங்கள், கொடி தர அதிகாரிகள், கடற்படை ஆராய்ச்சி பிரிவின் தலைவர், கப்டன் எல்.சி. விதானகே, கடற்படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.