பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் ‘PROTTASHA’ திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான ‘Corvette’ வகையின் போர் கப்பலான ‘BNS PROTTASHA’ இன்று (2022 ஏப்ரல் 2) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க வருகை தந்த கப்பலை வரவேற்றனர்.

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் ‘PROTTASHA’ 90.01 மீ நீளம் கொண்டுள்ளதுடன் 140 பணியாளர்கள் அங்கு உள்ளனர். மேலும், இந்த கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் முகமது கோலம் கிப்ரியா (Commander Mohammad Golam Kibria) பணியாற்றுகிரார்.

இதேவேளை, பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான ‘Prottasha’ போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் முகமது கோலம் கிப்ரியா (Commander Mohammad Golam Kibria) இன்று (2022 ஏப்ரல் 22) கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன மற்றும் கடற்படை ஏவுகணை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் சமன் பெரேரா ஆகியோரை கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் சந்தித்து சுமுகமான கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் இந் நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.

பங்களாதேஷ் கடற்படை கப்பலின் குழு உறுப்பினர்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். குறித்த நிகழ்வுகள் முடிந்ததும் கப்பல் 2022 ஏப்ரல் 04 ஆம் திகதி தீவை விட்டு புறப்பட உள்ளது.