இலங்கை கடற்படை வீரர்களுக்காக இந்திய கடற்படையின் ஐந்து பாய்மரக் கப்பல்கள் முலம் நடத்தப்பட்ட பயிற்சி திட்டம் நிறைவு
இந்திய கடற்படையின் ஐந்து பாய்மரக் கப்பல்கள் 2022 மார்ச் 10 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துடன் குறித்த படகுகள் இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுக்காக பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு இன்று (2022 மார்ச் 16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்திய கடற்படையின் Van de stadt Tonga 56 மற்றும் LC Class 40 வகையின் பயிற்சி பாய்மரக் கப்பல்களான INSV Mhadei, INSV Tarini, INSV Bulbul, INSV Kadalpura மற்றும் INSV Hariyal ஆகியவை 30 பணியாளர்களுடன் 2022 மார்ச் 10 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன் குறித்த படகுகள் பயிற்சி நிகழ்ச்சிகள் மேற்கொண்டு 03 நாட்கள் திருகோணமலை துறைமுகத்தில் தங்கியுள்ளது. பின்னர் இன்று (2022 மார்ச் 16) திருகோணமலை துறைமுகத்திலிருந்து 11 பயிற்சி அதிகாரிகள், 02 பெண் மத்திய அதிகாரிகள் மற்றும் ஒரு (01) பயிற்சி பயிற்றுவிப்பாளருடன் பாய்மரக் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பில் பங்குதாரர்களாக இரு கடற்படைகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்குத் தேவையான தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவைப் பரிமாறிக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பயிற்சி நிகழ்ச்சிகள் முடிந்ததும், இந்திய கடற்படையின் பாய்மர படகுகள் மார்ச் 19-ம் திகதி தீவில் இருந்து புறப்பட உள்ளன. இதற்கிடையில், இந்த பாய்மர படகுகளின் வருகை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் கோவிட்-19 நெறிமுறைகளுக்கு இணங்க நடத்தப்பட்டுள்ளது.