அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலொன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான Arleigh Burke-Class Destroyer வகையின் போர்க்கப்பலான USS FITZGERALD (DDG 62) கப்பல் இன்று (2022 மார்ச் 13) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் குறித்த கப்பலை வரவேற்கப்பட்டது.

கொமான்டர் D.J. Catteral கட்டளையிடப்படும் 160 மீ நீளமுள்ள Arleigh Burke-Class Destroyer வகையின் USS FITZGERALD (DDG 62) கப்பலில் 300 கடற்படை வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

USS FITZGERALD (DDG 62) கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலப் பகுதியில், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே நட்புறவையும் அறிவையும் பரிமாறிக் கொள்வதற்காக இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதுடன் குறித்த கப்பல் மார்ச் 16 ஆம் திகதி தீவில் இருந்து புறப்பட உள்ளது.

மேலும், இந்த கப்பல் தொடர்பான நடவடிக்கைகள் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்படுகின்றன.