பிரெஞ்சு, பங்களாதேஷ் மற்றும் இந்திய கடற்படைகளின் போர்க்கப்பல்கள் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு வந்தடைந்தன
பிரெஞ்சு, பங்களாதேஷ் மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான நான்கு போர்க்கப்பல்கள் 2022 மார்ச் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு வந்தடைந்துள்ளதுடன் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் குறித்த கப்பல்களை வரவேற்கப்பட்டன.
அதன்படி, பிரெஞ்சு கடற்படையின் வழங்கல் மற்றும் துணைக்கப்பலான ‘Loire’ போர்க்கப்பல் 2022 மார்ச் 08 ஆம் திகதியும் பங்களாதேஷ் கடற்படையின் Corvette வகையில் போர்க்கப்பலான ‘Prottasha’ போர்க்கப்பல் 2022 மார்ச் 9 ஆம் திகதியும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. மேலும், இந்திய கடற்படையின் Frigate வகையின் போர்க்கப்பல்களான ‘Talwar’ மற்றும் ‘Brahmaputra’ ஆகியவை 2022 மார்ச் 9 அன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான ‘Prottasha’ போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் Mohammad Golam Kibria மற்றும் கடற்படையின் பிரதித் தளபதி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா ஆகியோர் இடையில் சந்திப்பு மேற்கு கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் ‘Talwar’ மற்றும் ‘Brahmaputra’ ஆகிய போர்க்கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் மற்றும் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சஜித் கமகே ஆகியோர் இடையில் சந்திப்பு தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்த உத்தியோகபூர்வ விஜயங்களின் போது பிரான்ஸ் கடற்படையின் ‘Loire’ போர் கப்பல் மற்றும் இந்திய கடற்படையின் ‘Talwar’ மற்றும் ‘Brahmaputra’ ஆகிய போர் கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் நட்புரீதியான கடற்படை பயிற்சிகளில் பங்கேற்க உள்ளன.
இந்த போர்க்கப்பல்கள் தொடர்பான பணிகள் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட உள்ளன, பிரெஞ்சு கடற்படையின் ‘Loire’ 2022 மார்ச் 12 அன்றும் பங்களாதேஷ் கடற்படையின் ‘Prottasha’ மற்றும் இந்திய கடற்படை ‘Talwar’ மற்றும் ‘Brahmaputra’ 2022 மார்ச் 11 அன்றும் தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்து தீவை விட்டு வெளியேற திட்டமிடப்பட்டுள்ளது.