மரைன் படைப் பிரிவுடன் இனைந்து பயிற்சியை நிரைவு செய்த கடற்படை வீரர்களுக்கு சின்னங்கள் அணிவிப்பு கடற்படைத் தளபதியின் தலைமையில் இடம்பெற்றது.
மரைன் படைப் பிரிவுடன் இனைந்து வெற்றிகரமாக பயிற்சியை நிரைவு செய்த 07 வது ஆட்சேர்ப்பின் 04 அதிகாரிகள் மற்றும் 22 மாலுமிகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் 2022 மார்ச் 04 ஆம் திகதி சின்னங்கள் அணிவிக்கப்பட்டது. கடற்படைத் தளபதியின் தலைமையில் திருகோணமலை, சாம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கலந்துகொண்டார்.
2016 ஆம் ஆண்டு முதன்முறையாக 164 உறுப்பினர்களுடன் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை கடற்படை மரைன் படைப் பிரிவு இந்த ஆட்சேர்ப்பு உட்பட 7 ஆட்சேர்ப்புகளின் கீழ் 632 அதிகாரிகள் மற்றும் கடற்படையினரைக் கொண்ட கடற்படை பிரிவாக படிப்படியாக வளர்ந்துள்ளது.
அதன்படி, ஒன்பது (09) மாத காலப்பகுதியில் நடத்தப்பட்ட இந்த கடினமான கடல்சார் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 26 கடற்படை வீரர்கள் கடற்படைத் தளபதியிடமிருந்து மதிப்புமிக்க மரைன் சின்னத்தைப் பெற்றனர். பயிற்சியில் சிறந்து விளங்கிய கடற்படை வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களையும் கடற்படைத் தளபதி வழங்கி வைத்தார். இதன்படி, லெப்டினன்ட் பி.எச்.எச் ஜயதுங்க ஒட்டுமொத்த பாடங்களிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற உறுப்பினராகவும் சிறந்த துப்பக்கியாளராக கடற்படை வீரர் டபிள்யூ.ஜி.ஏ ஜீவங்கவும் சிறந்த நீச்சல் வீரராக ஈ.எம்.எம்.டீ விஜேபண்டாரவும் சிறந்த உடல் தகுதி கொண்ட வீர்ராக எச்.எம்.ஆர்.எம். ஹேரத் ஆகியோர் முறையே விருதுகளைப் பெற்றனர். வண்ணமயமான கலாச்சார நிகழ்வுகள் கொன்டுள்ள கண்கவர் காட்சியும் இங்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மாலுமிகளிடம் உரையாற்றியதுடன், நவீன யுக்திகளை நன்கு புரிந்து கொண்டு எதிர்கால கடற்படை கடமைகளை திறம்பட செய்ய சுய பயிற்சி, படிப்பு மற்றும் அனுபவம் மூலம் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். தந்திரோபாயங்கள், அத்துடன் சிறந்த தொழில் திறன், ஒரு திறமையான மாலுமியாக, எந்தவொரு சவாலையும் சமாளிக்கவும், தாய்நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பயிற்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கை கடற்படை கப்பல் விதுர நிருவனத்தின் கட்டளைத் தளபதி உட்பட அனைத்து ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கும், பயிற்சி பெற்ற மாலுமிகளின் குடும்பங்களுக்கும் கடற்படைத் தளபதி நன்றி தெரிவித்தார்.
இந்தச் சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ், கிழக்கு கடற்படை கட்டளையின் பணிப்பாளர் நாயகம்கள், சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் இராணுவ மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.