சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (CISM) மராத்தான் போட்டி நிகழ்வு- 2022 வெற்றிகரமான குறிப்பில் நடைபெற்றது

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் (Council International Military Sports-CISM ) மராத்தான் போட்டி நிகழ்வு – 2022 பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் மற்றும் முப்படைத் தளபதிகளின் வருகையுடன் இன்று (2022 பெப்ரவரி 20) கொழும்பில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி பிரான்சில் 'விளையாட்டு மூலம் நட்பு' என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் (CISM) 140 அங்கத்துவ நாடுகளுக்கிடையில் நட்பு மற்றும் தோழமை ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் வருடாந்தம் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, உலகின் மிகப்பெரிய ஒரு பல்துறை அமைப்புகளில் ஒன்றாக சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை விமானப்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் கொண்டாட்ட மராத்தான் போட்டி நிகழ்வு கொழும்பு ரைபிள் கிரீன் மைதானத்திற்கு அருகில் ஆரம்பமாகி விமானப்படை தலைமையகத்திற்கு அருகில் சுமார் 4 கிலோமீற்றர் தூரம் சென்றது. பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகள் தலைமையில் மராத்தான் போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட முப்படை வீரர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த மராத்தான் போட்டி நிகழ்வில் பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி, எயார் மார்ஷல் சுதர்சன பதிரன, கடற்படைத் பிரதித் தலைவர், ரியர் அட்மிரல் வை.என். ஜயரத்ன, பிரதித் துனை தளபதி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா உட்பட முப்படை வீரர்களின் குழு கலந்துகொண்டனர்.