கொழும்பு கடற்படை பயிற்சி 2022 (CONEX - 22) வெற்றிகரமாக நிறைவு
இலங்கை கடற்படை வீரர்களின் தொழில்முறை நிபுணத்துவம் மற்றும் நடைமுறை திறன்களை மேம்படுத்தும் நோக்கில் நான்காவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு கடற்படை பயிற்சி (Colombo Naval Exercise - 2022 – CONEX - 22) - 2022 பெப்ரவரி 14 ஆம் திகதி வெற்றிகரமாக நிரைவடைந்தது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வருடாந்தப் பயிற்சி (CONEX - 22) பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பிரசன்ன மஹாவிதானவின் தலைமையில் 2022 பெப்ரவரி 12 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த பயிற்சியின் கடல் கட்டம் (Sea Phase) 2022 பெப்ரவரி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு கடற்பரப்பில் நடைபெற்றது.
இந்த கடற்படை பயிற்சியின் போது, கப்பல்களுக்கு இடையில் வழிசெலுத்தல், கடலில் பொருட்கள் மற்றும் எரிபொருள் பரிமாற்றம், தீயணைப்பு, கடற்படை கப்பல்களின் வரிசைகள், பகல் மற்றும் இரவு துப்பாக்கி சூடு பயிற்சிகள், கடல் மேற்பரப்பு மற்றும் விமான இலக்குகளை அணுகுவதற்கான தகவல்தொடர்பு பயிற்சிகள். மற்றும் கண்டங்களுக்கு இடையிலான பல கடற்படை பயிற்சிகள் நடத்தப்பட்டன. இந்த கடற்படை பயிற்சியின் இறுதி நாள் கடற்படையின் பிரதிப் பணியாளர் மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் உபுல் டி சில்வ்வினால் மதிப்பாய்வு செய்யப்பட்டதுடன் பயிற்சியில் பங்குபற்றிய கப்பல்களினால் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
நாட்டின் முதல் பாதுகாப்பு வளையமாக கடற்படையின் செயல்பாடுகளை மிகவும் திறமையாக நிறைவேற்றுவதன் மூலம் இலங்கையின் கடல் வலயத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை கடற்படை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்த நோக்கத்திற்காக, நன்கு பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த கடற்படையினரை பராமரிப்பது அவசியம், மேலும் அத்தகைய கடற்படை பயிற்சிகளிலிருந்து பெறப்பட்ட அறிவு, திறன்கள் மற்றும் அனுபவம் ஆகியவை ஆழ்கடலில் போதைப்பொருள் சோதனைகள் உட்பட சட்ட அமலாக்க நடவடிக்கைகளை திறம்பட மற்றும் பயனுள்ள செயல்பாட்டிற்கு பெரிதும் உதவும். சர்வதேச கடற்படை பயிற்சிக்கு இணங்க இந்த கடற்படை பயிற்சியின் மூலம் பிராந்திய பொதுவான கடல்சார் சவால்களை கூட்டாக முறியடித்து கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை கப்பல்களின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும் என்று கடற்படை நம்புகிறது.
சுகாதாரப் பிரிவு வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி, கடற்படை வெளியீட்டு கட்டளையின் கீழ் கொழும்பு கடற்படை பயிற்சியின் - 2022 (Colombo Naval Exercise – 2022 – CONEX 22) திட்டமிட்ட அனைத்து கட்டங்களையும் கடற்படை வெற்றிகரமாக நடத்தியது.