மன்னார் பிரதேசம் மற்றும் அதன் பல்லுயிரியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

மன்னார் பகுதி, அதன் பல்லுயிர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சம்பத் செனவிரத்னவினால் 2022 பெப்ரவரி 5 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்தில் நடத்தப்பட்டது

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல், சுற்றாடல் துறை மற்றும் பரிணாமம், மரபியல், பறவையியல் ஆராய்ச்சி விஞ்ஞானி மற்றும் சூழலியல் நிபுணரான பேராசிரியர் சம்பத் செனவிரத்ன அவர்களினால் மன்னார் பிரதேசத்தில் நெடுந்தூரம் புலம் பெயர்ந்து வாழும் பறவைகளின் முக்கியத்துவம் மற்றும் அரியவகை பறவை இனங்கள் குறித்த அவரது ஆய்வு முடிவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அங்கு நடத்தப்பட்டது. மன்னார் மணல்மேடுகளில் வாழும் பறவைகளை பாதுகாப்பதில் கடற்படையினர் ஆற்றி வரும் பங்களிப்பை அவர் மேலும் பாராட்டினார்.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் வடமத்திய கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் நிலந்த ஹேவாவிதாரண மற்றும் கடற்படையினர் பலர் கலந்துகொண்டனர்.