74 வது சுதந்திர தின விழாவில் இலங்கை கடற்படை பெருமையுடன் பங்கேற்கிறது

74 ஆவது சுதந்திர தின விழா இன்று (2022 பெப்ரவரி 04) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும், ஆயுதப்படைகளின் தளபதியுமான அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றதுடன் இவ் நிகழ்வில் கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.

தேசிய கொடியை ஜனாதிபதி அவர்களால் ஏற்றிய பின் விழாவின் நடவடிக்கைகள் முறையாக தொடங்கப்பட்டன. கடற்படை தகவல்தொடர்பு பிரிவின் கடற்படையினர் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அனைத்து சடங்கு ஏற்பாடுகளையும் தயார் செய்துள்ளதுடன். கொடி ஏற்றுவதுக்கு இணையாக, இலங்கை கடற்படையின் இசைக் குழுவினர் இசைத்த இசைக்கு தேசிய கீதம் பாடப்பட்டது.

74 வது சுதந்திர தின நிகழ்வுக்காக 61 கடற்படை அதிகாரிகள் மற்றும் 1029 மாலுமிகள் எட்டு (06) பிரிவுகளாக கலந்து கொண்டுள்ளதுடன் கடற்படையின் முக்கிய ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் காட்சியக்கப்பட்டன. இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி கொமடோர் டேமியன் பெர்னாண்டோ அணிவகுப்புக்கு தலைமை தாங்கினார்.

லெஃப்டினென்ட் கமாண்டர் ஹர்ஷ வீரக்கொடியால் கடற்படைக் கொடியை முன்கொண்டு, கடற்படைக்கு வழங்கப்படுகின்ற ஜனாதிபதி வண்ணங்கள், கொடிகள் மற்றும் அதிகாரிகளுடன் சென்ற இந்த அணிவகுப்புக்கு கமாண்டர் கயான் விக்கிரமசூரிய கட்டளை வழங்கினார்.

இலங்கையின் பிரதான நிலப்பரப்பை விட ஏழு மடங்கு பெரியதான இலங்கையின் கடல் மண்டலத்தில் நடைபெறுகின்ற அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுக்குவதற்கு கடற்படை பங்களிக்கிறது, மேலும் கடலோர மண்டலத்தில் தொடர்ந்து ரோந்து செல்வதற்கும், இலங்கையில் பாதுகாப்பு கடமைகளை நடத்துவதற்கும் பங்களிக்கிறது. 74 வது சுதந்திர தின நிகழ்வுகளில் கடற்படை சமூகத்தின் நிவாரணத்திற்கு பங்களிக்கும் இலங்கை கடற்படையின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் படைகள் மற்றும் பிரிவுகள் கடற்படையின் பெருமையை பிரதிபலிக்க பங்களிக்கின்றன.

கடற்படை அணிவகுப்பின் முதல் கடற்படைப் பிரிவாக, லெப்டினன்ட் கமாண்டர் டிரோன் பெர்னாண்டோ தலைமையிலான கடற்படை தலைமையகப் பிரிவு வீதியில் அணிவகுத்துச் சென்றது, அதைத் தொடர்ந்து பெருங்கடல் வலயத்தின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஜனாதிபதியின் வண்ணங்கள் பெற்ற கடற்படை ஏவுதல் கட்டளையின் படைப்பிரிவுக்காக லெப்டினன்ட் கமாண்டர் சனோஜ் ரொத்ரிகோ கட்டளை வழங்கினார்.

தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கட்டளையிட்ட 04 வது துரித தாக்குதல் படகுகள் படையணிக்கு லெப்டினன்ட் கமாண்டர் சந்தன குமார கட்டளை வழங்கினார்.

1993 ஆண்டில் நிறுவப்பட்ட சிறப்பு படகு படையின் அணிவகுப்புக்காக லெப்டினன்ட் கமாண்டர் அனுர குணதிலக்க கட்டளை வழங்கினார்.

ஆழமற்ற நீரைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட விரைவான அதிரடி படைக்கு லெப்டினன்ட் கமாண்டர் துமிந்த தயானந்த கட்டளையிட்டார். மேலும், இன்றைய அணிவகுப்பின் கடற்படை மரைன் பிரிவுக்கு லெப்டினன்ட் கமாண்டர் லசித் சாமரவினால் கட்டளையிடப்பட்டது. வண்ணமயமான அணிவகுப்பில் வரிசையில் அடுத்ததாக லெப்டினன்ட் கமாண்டர் தெரங்கா கொடிசிங்க தலைமையில் அனைத்து கிளைகளையும் குறிக்கும் கடற்படை பெண்கள் பிரிவு சென்றது.

ரியர் அட்மிரல் அனுர ஏகநாயக்க, பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும், 2010 இல் நிருவப்பட்ட இலங்கை கடலோரக் காவல்படை முதல் முறையாக சுதந்திர தின விழாவில் இம் முரை கலந்து கொன்டதுடன் லெப்டினன்ட் கமாண்டர் யொஹான் குணரத்ன கட்டளை வழங்கினார்.

இலங்கை கடற்படையின் பிரதான ஆயுதங்கள் மற்றும் பாகங்களை தாங்கிச் சென்ற வாகன மரியாதை அணிவகுப்பிற்கு கமான்டர் ரங்க சிந்தக கட்டளை வழங்கினார்.

மேலும், வணக்கத்திற்குரிய மகாசங்கத்தினர், ஏனைய மத குருமார்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நீர்ப்பாசன அமைச்சர் பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரண்ணாகொட மேற்கு மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போஸ் ரொஷான் குனதிலக, பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, பாதுகாப்புத் தளபதியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்ன விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இராஜதந்திரிகள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.