இலங்கை கடற்படை கப்பல் ‘தம்மென்னா’ நிருவனம் தனது 26 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
2022 ஜனவரி 01 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்தின் 26 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2022 ஜனவரி மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இரவு முழுவதும் பிரித் ஓதுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு குறித்த நிறுவன வழாகத்தில் இடம்பெற்றது.
இரவு முழுவதும் இடம்பெற்ற இந்த பிரித் ஓதுதல் நிகழ்வுக்காக அனுராதபுரம் பன்டுலகம ஸ்ரீ சம்புத்த மஹா விகாரையிலிருந்து இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிருவனத்திக்கு நினைவுச்சின்னங்களின் கலசத்தை கொண்டு வருவது வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்னவின் தலைமையில் நடைபெற்றதுடன் பன்டுலகம ஸ்ரீ சம்புத்த மஹா விகாரயத்தில் பிரதான சங்கத் தேரர் உட்பட மகா சங்கத்தினரால் பீரித் ஓதப்பட்டது.
மேலும், 2022 ஜனவரி 4 ஆம் திகதி மகா சங்க உறுப்பினர்கள் 21 பேருக்கு அன்னதானம் மற்றும் பிரிகர வழங்கும் விழா நடைபெற்றது, இதில் கௌரவ. சங்கத்தினர் கடற்படைத் தளபதி உட்பட கடமையாற்றும் மற்றும் ஓய்வுபெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆசிகள் வழங்கினார்கள்.
தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்காக வடமத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன, குறித்த கட்டளையின் பிரதித் தளபதி, கொமடோர் எல்.என்.ஹேவாவிதாரண, இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கமாண்டர் ஜே.எம்.ஜி.பி. ஜயகொடி, மற்றைய நிருவனங்களின் கட்டளை அதிகாரிகள், துரை பிரதானிகள் மற்றும் கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.