கடற்படை 'P-601' கப்பலை உத்தியோகபூர்வமாக இலங்கை கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தது
இலங்கை கடற்படைக் கப்பல் குழுவில் இணைக்கப்பட்டு சுமார் நான்கு தசாப்தங்களாக கடற்படையின் விலைமதிப்பற்ற சேவையில் ஈடுபட்ட பின் 2021 செப்டம்பர் 30 ஆம் திகதி கடற்படை சேவையிலிருந்து விடைபெற்ற இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகர (P 601) 2022 ஜனவரி 03 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவின் போது இலங்கை கடலோர காவல்படையிடம் சம்பிரதாயமாக கையளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2021 செப்டெம்பர் 30 ஆம் திகதி கடற்படையிலிருந்து விடைபெற்ற இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகர (P 601),வின் வருடாந்த நீருக்கடியில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளை முடிந்த பின்னர் தென் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகே அவர்களின் தலைமையில் இவ்வாரு இலங்கை கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அனுர ஏக்கநாயக்கவிடம் 2022 ஜனவரி 03ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இலங்கை கடலோர காவல்படையின் CG 61 என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் எதிர்கால நடவடிக்கைகளுக்காக கடலோர காவல்படையினரால் பயன்படுத்தப்படும்.
தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்வுக்காக கடற்படை ஏவுகணை கட்டளையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சஜித் கமகே, கடற்படையின் பணிப்பாளர் நாயகம் நபர்கள் ரியர் அட்மிரல் அருண தென்னகோன் உட்பட கடற்படை தலைமையகம் மற்றும் தென் கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.