இலங்கை கடற்படை அரச சேவையாளர் உறுதிமொழியுடன் புது வருடத்தில் கடமைகளை தொடங்கியது
இலங்கை கடற்படையினர் 2022 புதிய ஆண்டில் கடமைகள் தொடங்குவதற்கு முன்னர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இன்று (2022 ஜனவரி 03) காலை கடற்படைத் தலைமையகத்தில் அரச சேவையாளர் உறுதிமொழி வாசித்தனர்.
இதன்படி, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர் உறுதிமொழியும் வாசிக்கப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய கடற்படைத் தளபதி, கடற்படை வீரர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு 2022 புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். கோவிட்-19 பரவுவதை எதிர்கொள்ளும் சவாலான ஆண்டாகிய 2021 ஆம் ஆண்டில் தொற்றுநோய்கள் இருந்தபோதிலும், இலங்கை கடற்படையினர் இயன்றளவு தங்கள் கடமைகளைச் செய்ததற்காக அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். கடந்த வருடத்தைப் போன்று புதிய வருடத்திலும் தனது கடமைகளை அதிகபட்சமாக முன்னெடுப்பதற்கு கடற்படை எதிர்பார்ப்பதாகவும், தேவையான வசதிகளை அதிகபட்சமாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடற்படையின் முறையான ஒழுங்கைப் பேணுவதுடன், இளநிலை அதிகாரிகள் மற்றும் இளைய மாலுமிகளை சரியான முறையில் வழிநடத்துவது சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட மாலுமிகளின் பொறுப்பாகும் என்றும் கட்டளைத் தளபதி கூறினார். சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக கடற்படைக் கடமைகளுக்கு மேலதிகமாக, புதிய வருடத்திலும் இலங்கை கடற்படையின் அபிவிருத்தித் திட்டங்களில் அனைத்து கடற்படை வீரர்களும் தமது முழுமையான பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கடற்படைத் தளபதி மேலும் தெரிவித்தார்.
தற்போது நாடு எதிர்நோக்கும் கோவிட் 19 சுகாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுத்து கடமைகளை பொறுப்புடன் நிறைவேற்றுவது குறித்து கருத்துகளை தெரிவித்த கடற்படையின் சிரேஷ்ட ஆலோசகர், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, தொற்றாத நோய்களைத் தடுப்பது (கோவிட் 19 உட்பட) ரியர் அட்மிரல் (மருத்துவம்) ஜிஎஸ்ஆர் ஜெயவர்தன, 2022 ஆம் ஆண்டில் அனைத்து மாலுமிகளும் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப தங்கள் கடமைகளை தொடர்ந்து செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தற்போதைய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்தப்பட்ட அரச சேவையாளர் உறுதிமொழி வாசிக்கும் நிகழ்வில் கடற்படையின் பணிப்பாளர் நாயகம், கொடி அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட மற்றும் இளைய கடற்படையினர், உட்பட பலர் கலந்துகொண்டனர். அதேநேரம், அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கிய கடற்படையின் உறுப்பினர்கள் அரச சேவையாளர் உறுதிமொழி வாசிக்கும் நிகழ்வுகள் கட்டளை தளைபதிகள் தலைமையில் இடம்பெற்றது.