71வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் இந்து சமய நிகழ்ச்சி கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் தேவாலயத்தில் இடம்பெற்றது
2021 டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 71 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் சமய நிகழ்ச்சிகளின் இந்து சமய நிகழ்ச்சி இன்று (2021 டிசம்பர் 01) கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் இந்து தேவாலயத்தில் நடைபெற்றது.
இலங்கை கடற்படையின் 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசி வழங்கும் சமய நிகழ்ச்சிகள் தொடர் தொடக்கும் வகையில், கஞ்சுக பூஜை மற்றும் கொடி ஆசீர்வாத நிகழ்வு 2021 நவம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ருவான்வேலி மகா சே ரதுன் மற்றும் ஜெயஸ்ரீ மகா போதி முன்றலில் இடம்பெற்றதுடன் கிறிஸ்தவ சமய வழிபாடுகள் 2021 நவம்பர் 23 அன்று கொழும்பு புனித லுசியா தேவாலயத்தில் இடம்பெற்றது.
அதன் படி, நாட்டிற்காக தமது உயிரை தியாகம் செய்த, அங்கவீனமாகிய மற்றும் தற்போது சேவையாற்றும் கடற்படை வீரர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினர்களுக்கும், முழு கடற்படையினருக்கும் ஆசிகள் வழங்கி 71வது ஆண்டு நிறைவை முன்னிட்ட இந்து சமய நிகழ்வு இன்று (2021 டிசம்பர் 01) கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவாலயத்தில் இடம்பெற்றது.
தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின் படி மேற்கொள்ளப்பட்ட இந்த சமய வழிபாடுக்காக பணிப்பாளர் நாயகம் சேவைகள், ரியர் அட்மிரல் சேனக சேனவிரத்ன, விளையாட்டுப் பணிப்பாளர், கொமடோர் ரியென்சி பொன்சேகா, இலங்கை கடற்படை கப்பல் ரங்கல்ல நிருவனத்தின் கட்டளை அதிகாரி கப்டன் ரொஹான் ஜோசப், பிரதி பணிப்பாளர் கடற்படை ஆயுதம் கப்டன் ரொஷான் முதலிகம உட்பட கடற்படைத் தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட ஒரு குறிப்பிட்ட கடற்படை வீரர்கள் கலந்துகொண்டனர்.