கிண்ணியா, குறிஞ்சங்கேணி பாலத்திற்கு அருகில் பாதுகாப்பான பயணிகள் படகு சேவையை கடற்படை ஆரம்பித்துள்ளது
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை களப்பு ஊடாக வழங்குவதற்காக பாதுகாப்பான பயணிகள் படகு சேவையை இலங்கை கடற்படை 2021 நவம்பர் 25 அம் திகதி முதல் ஆரம்பித்துள்ளது.
கிண்ணியா, குறிஞ்சங்கேணி பாலம் நிர்மாணிக்கப்படுவதால், பிரதேசவாசிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள், களப்பு பகுதியினூடாக தினசரி பயணிப்பதில் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் ஆலோசனையின் பேரில் குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை அப்பகுதி மக்களுக்கு இந்த பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்கப்படும்.
அதன்படி, ஒரே நேரத்தில் 25 பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ஒரு பயணிகள் படகொன்று கிழக்கு கடற்படைக் கட்டளையின் மேற்பார்வையின் கீழ் 2021 நவம்பர் 25 அன்று முதல் காலை 07.00 - 08.00 மற்றும் பிற்பகல் 12.00 - 02.00 மணி இடையில் சேவையில் ஈடுபடுத்தப்படும். மக்கள் பாதுகாப்பாக படகில் ஏறுவதற்கு கடற்படை தற்காலிக ஜெட்டி ஒன்றையும் அமைத்துள்ளது.