இரண்டு புதிய இலங்கை சாதனைகளைப் படைத்த கயந்திகா அபேரத்னவுக்கு கடற்படைத் தளபதியினால் பதவி உயர்வு
மகளிருக்கான 1500 மீற்றர் மற்றும் 5000 மீற்றர் தடகளப் போட்டிகளில் இரண்டு புதிய இலங்கை சாதனைகளைப் படைத்து இலங்கை கடற்படைக்கு பெரும் புகழைக் கொண்டு வந்த கடற்படை வீராங்கனி கயன்திகா அபேரத்னவுக்கு கடற்படைத் தளபதியினால் இன்று (நவம்பர் 21) பதவி உயர்வு வழங்கப்பட்டன.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற 99 ஆவது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 1500 மீ ஓட்டப்போட்டியில் 4 நிமிடங்கள் 9.12 வினாடிகளில் (4: 9.12) மற்றும் பெண்களுக்கான 5000 மீ ஓட்டப்போட்டியில் 15 நிமிடங்கள் 55.84 வினாடிகளில் (15: 55.84) முடித்து கயன்திகா அபேரத்ன புதிய இலங்கை சாதனைகள் படைத்தார்.
அதன்படி இன்று (2021 நவம்பர் 02,) கயந்திகா அபேரத்ன மற்றும் அவரது பயிற்றுவிப்பாளரும், தேசிய விளையாட்டு அகாடமியின் பணிப்பாளருமான ஜி.எல்.சஜித் ஜயலால் அவர்கள் கடற்படைத் தளபதியும் கடற்படை விளையாட்டு கவுன்சிலின் தலைவருமான வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் இன்று சந்தித்தனர். பல வருட அர்ப்பணிப்புடன் மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் பெண்களுக்கும் முன்மாதிரியாக இருத்தல் பாராட்டிய கடற்படைத் தளபதி, அவருக்கு சிறு அதிகாரியாக சேவைப் பதவி உயர்வு வழங்கி, தாய்நாட்டிற்கு எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற ஊக்குவித்தார்.
2010 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையில் இணைந்த சிறு அதிகாரி கயந்திகா அபேரத்ன, 2017 ஆம் ஆண்டு, தைபேயில் நடைபெற்ற ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான 800 மீ ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் ஓட்டப்போட்டியில் 800 மீற்றர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 1500மீ ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கமும், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்று கடற்படைக்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். கயந்திகா அபேரத்ன கடற்படை தடகள அணியில் தனது சிறந்த பிரதிநிதித்துவத்தை அங்கீகரிப்பதற்காக 2021 கடற்படை வண்ண விருதுகளில் சிறந்த தடகள கோப்பையையும் வென்றார்.
மேலும், கடற்படைத் தளபதி, விளையாட்டு வீரரைப் பயிற்றுவிப்பதில் முக்கிய பங்காற்றிய அவரது பயிற்சியாளர் திரு. ஜி.எல். சஜித் ஜெயலாலைப் பாராட்டியதுடன், இந்த சாதனைக்கான அவரது பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.