போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் பற்றிய பாடநெறிகளின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை நடத்தும் கடற்படையினர்களுக்கு திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் நடத்தப்பட்ட பாடநெறிகளின் (Counter Narcotics Boarding Officer Course/ Advanced Boarding Officer Course) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2021 செப்டம்பர் 22 அன்று கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ்வின் தலைமையில் திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
அமெரிக்கா கடலோர காவல்படையின் நடமாடும் பயிற்சி குழுவால் 2021 ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 22 வரை திருகோணமலை சிறப்பு படகுகள் படை தலைமையகத்தில் நடத்தப்பட்ட இந்த பயிற்சிகளுக்காக கடற்படை கொடி கட்டளை, 4 வது துரித தாக்குதல் படகுகள் படையனி மற்றும் சிறப்பு படகுகள் படையின் 21 கடற்படையினர் கழந்து கொண்டனர்.
அதன்படி, , ‘Counter Narcotics Boarding Officer’ பாடநெறி மூலம் போதைப்பொருள் தடுப்பு, கப்பல்களுக்கு அணுகல் மற்றும் தேடுதல் நடைமுறைகள், கடல் சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு தந்திரோபாயங்கள் பற்றிய விரிவான அறிவை வழங்குவதே நோக்கமானது. மேலும், ‘Advanced Boarding Officer’ பாடநெறி பாடத்திட்டமானது அறை அனுமதி, அறிக்கை எழுதுதல், தீர்ப்பு பயிற்சி, தனிமைப்படுத்தும் நுட்பங்கள் மற்றும் கடல் விண்வெளி பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் நடைமுறை பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்த சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வுக்காக 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, கேப்டன் ராஜபிரிய சேரசிங்க, சிறப்பு படகுகள் படையின் கட்டளை அதிகாரி கேப்டன் நிஸ்சங்க விக்கிரமசிங்க மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக உறுப்பினர்கள் கழந்துகொண்டனர்.