வெலிசர கடற்படை வைத்தியசாலைக்கு புதிய ஹீமோடையாலிசிஸ் பிரிவு
வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையின் புதிதாக நிறுவப்பட்ட ஹீமோடையாலிசிஸ் பிரிவு (Hemodialysis Unit ) இன்று (2021 ஜூலை 15) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலமையில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
கடற்படை நலன்புரி பணிப்பகத்தின் மூலம் நிதியுதவியளிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு கடற்படையின் சேவா வனிதா பிரிவு அத்தியாவசிய வளங்களை வழங்கியது.
புதிதாக ஏற்படுத்தப்பட்ட இந்த வசதிகளினால் சிறுநீரகத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை நிர்வகிப்பதை எளிதாகியுள்ளது. மேலும் இதன்மூலம் அனைத்து சேவை மற்றும் ஓய்வு பெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் டயாலிசிஸ் சிகிச்சையையும் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்காக கடற்படை அதிகரிகாரிகளின் பிரதானி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியும், தன்னார்வ கடற்படையின் தளபதியுமான ரியர் அட்மிரல் உபூல் டி சில்வா, பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன மற்றும் சுகாதார சேவைகளின் செயல் பணிப்பாளர் நாயகம் மருந்துவ கொமடோர் பீ.ஜே.பீ மாரபே உட்பட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.