ஜப்பானிய சுய பாதுகாப்பு கடல்சார் படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான கடற்படைப் பயிற்சி
ஜப்பானிய சுய பாதுகாப்பு கடல்சார் படையின் ' KASHIMA ' மற்றும் ' SETOYUKI ' என்ற இரண்டு பயிற்சி போர்க்கப்பல்கள் (02) மூன்று நாள் (03) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2021 ஜூன் 18 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததுடன் இன்று (20 ஜூன் 2021) இலங்கையில் இருந்து புறப்படும் போது குறித்த கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் பயிற்சியொன்று மேற்கொண்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில் மேற்கொள்ளப்பட்ட இந்த கடற்படைப் பயிற்சிக்காக இலங்கை கடற்படைக் கப்பல் சாகர கலந்துகொண்டதுடன் இங்கு கப்பல் பாதை வடிவங்கள், கப்பல் சூழ்ச்சிகள் மற்றும் தகவல்தொடர்பு பயிற்சிகளை நடத்தியது. மேலும், பயிற்சியின் முடிவில், தீவை விட்டு வெளியேறும் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடல்சார் படையின் இரண்டு போர்க்கப்பல்களுக்கும் இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டது.
கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த கடல்சார் பயிற்சி மூலம் இரு கடற்படைகளுக்கிடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, கடல்சார் செயல்பாடுகள், பரிமாற்ற உத்திகள் மற்றும் அனுபவங்களைப் பற்றிய புதிய அறிவைப் பெறுவது, புதிய சவால்களை அடையாளம் காண்பது மற்றும் கூட்டாக தீர்வுகளைக் எடுப்பது போன்ற பல நன்மைகளை அறுவடை செய்ய வாய்ப்பு வழங்குகியது.