பூஸ்ஸ இடைநிலை சிகிச்சை மையத்திற்கு பல மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன
இலங்கை கடற்படையால் பராமரிக்கப்படும் பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்திற்குத் தேவையான மருத்துவ பொருட்கள், படுக்கைகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை லீசன்ஸ் வைத்தியசாலை மற்றும் டயலொக் நிருவனம் மனுசத் தெரண மனிதாபிமான செயல்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹெவகேவிடம் வழங்கும் நிகழ்வு 2021 ஜூன் 04 மற்றும் 11 ஆம் திகதிகளில் தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
கோவிட் 19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவாக இந்த இடைநிலை சிகிச்சை மையம் பூஸ்ஸ கடற்படை தளத்தில் கடற்படையால் நிறுவப்பட்டது. அதன்படி, இந்த இடைநிலை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை லீசன்ஸ் வைத்தியசாலை மனுசத் தெரண மனிதாபிமான செயல்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து 2021 ஜூன் 04 ஆம் திகதி வழங்கியதுடன் டயலொக் நிருவனம் மனுசத் தெரண மனிதாபிமான செயல்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான 50 படுக்கைகள் 2021 ஜூன் 11 ஆம் திகதி நன்கொடையாக வழங்கியது.
இந் நிகழ்வுகளுக்காக தெற்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி கமடோர் ஹரிந்திர ஏகநாயக்க உள்ளிட்ட லீசன்ஸ் வைத்தியசாலை, டயலொக் நிருவனம் மற்றும் மனுசத் தெரண நிருவனத்தின் உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.